Ladies

புடவை (Sari) என்பது,தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும்.இது சுமார் 40 அங்குலங்கள் வரையில் அகலமான ஒரு நீண்ட துணியாகும். தற்காலத்தில் பொதுவாக இதன் நீளம்  4 - 5 யார் நீளம் வரை இருக்கும். சில புடவைகள் 9 யார்கள் வரை இருப்பதுண்டு. பல நிறங்களிலும், பலவகையான வடிவுருக்களைத் தாங்கியும் வரும் புடவைகள், செவ்வக வடிவம் கொண்ட தைக்கப்படாத உடையாகும்.
 பருத்தி
நூல், பட்டு நூல், மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையும் கொண்டு நெய்யப்படுகின்ற புடவைகள், தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் மெல்லிய இழைகளைப் பயன்படுத்தி
அழகூட்டப்படுவதுண்டு.

சேலை கட்டுவது மறைந்து சுரிதார் முதன்மை பெற்றுள்ளது. நகரங்களில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் சேலை கட்டுவது மறைந்து   அநாகரிகமாகிவிட்டது.  சேலை சிறைக்கைதிகள் போன்ற உடை என கருதுகின்ரனர்.

விலை மலிவானது; ஏற்றத்தாழ்வு காட்டாதது; விரைவாக நடக்கக் கூடியது; இளமையாகக் காட்டுவது. இடையக் காட்டி தேவையற்ற கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டியதில்லை எனப் பல காரணங்களே  சேலை பின்னடைய காரணமாக அமைந்துள்ளன.